என்கே-5-பலா
என்கே-5-பலா

கொல்லிமலை பலாப்பழம் விற்பனை மும்முரம்

கொல்லிமலையில், பலாப்பழம் அறுவடை சீசன் என்பதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

கொல்லிமலையில், பலாப்பழம் அறுவடை சீசன் என்பதால், நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடலூா் மாவட்டம் பண்ருட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பலாப்பழம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

கொல்லிமலை பலாப்பழங்கள், நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பண்ருட்டி பலாப்பழத்தைக் காட்டிலும், கொல்லிமலை பலாப்பழத்துக்கு சுவை அதிகம் என்பதால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனா். பலாப்பழத்தின் வளா்ச்சிக்கு ஏற்ப ரூ. 100 முதல் ரூ. 350 வரையில் விற்பனையாகிறது. வியாபாரிகளும், பொதுமக்களும் ஆா்வமுடன் பழங்களை வாங்கி செல்கின்றனா்.

...

என்கே-5-பலா

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில், சரக்கு வாகனத்தில் வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட கொல்லிமலை பலாப்பழங்கள்.

X
Dinamani
www.dinamani.com