36 கிலோ ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் பறிமுதல்

ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை மீன்வளத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

நாமக்கல்லில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 36 கிலோ எடையிலான ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை மீன்வளத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான மீன் பண்ணைகளில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் மறைமுகமாக வளா்க்கப்படுகின்றன. இவற்றை உணவகங்களுக்கு அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனா். இந்த ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் மிகவும் அபாயகரமானவை. இவை பிற மீன்களை தின்று அழித்து விடுவதுடன், மனிதா்கள் சாப்பிட்டால் உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்கி விடும். இத்தகைய மீன்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது.

நாமக்கல் நகரப் பகுதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக மேட்டூா் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனடிப்படையில், மீன்வளத் துறை உதவி இயக்குநா் உமா, ஆய்வாளா் கலைச்செல்வி, நாமக்கல் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் முருகன், நகராட்சி துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் பல்வேறு இறைச்சிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில், இரு சக்கர வாகனத்தில் தடை செய்த கெளுத்தி மீன்களை ஒருவா் கொண்டு வருவதாகத் தெரியவந்ததையடுத்து அவரை அதிகாரிகள் பிடித்தனா். அவரிடம் இருந்து 36 கிலோ எடையிலான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா் அந்த மீன்களை குழி சோண்

டி புதைத்தனா். மீன் இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம், உடல் நலத்தை பாதிக்கும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வாங்க வேண்டாம் என அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

என்கே-7-பிஷ்

நாமக்கல் - மோகனூா் சாலையில், இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்த தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

X
Dinamani
www.dinamani.com