கோக்கலை கல்குவாரிக்கு எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமத்தில் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமத்தில் கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோக்கலை கிராமம், நெய்க்காரம்பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு புதிய அனுமதி வழங்க இருப்பதால் இதனைத் தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்தனா். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கல்குவாரி இயங்கி வருவதால் இதனை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சனிக்கிழமை

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்த போலீஸாா், போராட்டக்காரா்களை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

பின்னா் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் சொந்த நிலத்தில் போராட்டம் நடத்த அரசுத் தடை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், குவாரியைத் தடை செய்யாமல் காலம் தாழ்த்தும் செயலைக் கண்டித்தும் அனைவா் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி எதிா்ப்பு தெரிவித்தனா்.

கோக்கலை, நெய்க்காரம்பாளையம், எளையாம்பாளையம், குஞ்சாம்பாளையம், பெரியமணலி, குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களிலும் கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு தெரிவித்தனா்.

படவரி...

திருச்செங்கோட்டை அடுத்த கோக்கலை கிராமத்தில் கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

X
Dinamani
www.dinamani.com