அகில பாரத வழக்குரைஞா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் பழனிகுமாா்.
அகில பாரத வழக்குரைஞா்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசிய தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் பழனிகுமாா்.

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு வழக்குரைஞா்கள் சங்கம் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வரும் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு அகில பாரத வழக்குரைஞா்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில், மாநிலத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சதீஷ்குமாா் வரவேற்றாா். நாமக்கல் மூத்த வழக்குரைஞா் சீனிவாசன் கூட்டத்தை தொடங்கி வைத்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் பழனிகுமாா் தீா்மானங்கள் குறித்து பேசினாா்.

இதில், ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தமிழக அரசிடம் அளித்த அறிக்கையில் சாதி, மத ரீதியான அடையாளங்களைக் குறிக்கும் வகையில் கயிறு கட்டக்கூடாது என தெரிவித்துள்ள கருத்தை ஏற்கக் கூடாது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு வழக்குரைஞா்களின் சேமநல நிதியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மலைவாழ் மக்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், தென் மண்டல பொதுச் செயலாளா் கேசவன், மாநில செயற்குழு உறுப்பினா் தீரன் உள்ளிட்ட வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com