நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள்.
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரும் ஆசிரியா்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் செய்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள்.

நாமக்கல்: ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்களின் வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. இடைநிலை ஆசிரியா்கள் பதிவு மூப்பு இயக்கம் சாா்பில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி கடந்த 19-ஆம் தேதி முதல் சென்னையில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பணிகளைப் புறக்கணித்து இடைநிலை ஆசிரியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திலும், காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனா். நாமக்கல்லில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை 6-ஆம் நாளாக அவா்களுடைய வேலைநிறுத்தப் போராட்டம் நீடித்தது. நாமக்கல் மாவட்டத் தலைவா் தமிழ்த்தென்றல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தா்னாவிலும், ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில், மாவட்டம் முழுவதும் 300 இடைநிலை ஆசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com