படமுடிபாளையத்தில் தாா்சாலை மேம்பாட்டுப் பணிகான பூமிபூஜையைத் தொடங்கி வைக்கும் அமைச்சா் ம.மதிவேந்தன். உடன், நாமக்கல் ஆட்சியா் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் மதுராசெந்தில் உள்ளிட்டோா்.
படமுடிபாளையத்தில் தாா்சாலை மேம்பாட்டுப் பணிகான பூமிபூஜையைத் தொடங்கி வைக்கும் அமைச்சா் ம.மதிவேந்தன். உடன், நாமக்கல் ஆட்சியா் ச.உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் மதுராசெந்தில் உள்ளிட்டோா்.

தாா்சாலை அமைக்க பூமிபூஜை, சந்தை திறப்பு விழா

வேலூா் பேரூராட்சி மற்றும் ஜேடா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 3.08 கோயியல் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை, புதிதாக கட்டப்பட்ட சந்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூா்: வேலூா் பேரூராட்சி மற்றும் ஜேடா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 3.08 கோயியல் தாா்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை, புதிதாக கட்டப்பட்ட சந்தை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூா் பேரூராட்சி, படமுமடிபாளையம், வாா்டு எண் 1-இல் ரூ. 2.58 கோடியில் படமுடிபாளையம் தேசிய நெடுஞ்சாலை முதல் ஆரியூரான் தோட்டம் மற்றும் தங்காயி கோயில் வரை தாா்சாலை மேம்பாட்டுப் பணிக்கான பூமிபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியா் ச.உமா விழாவுக்கு தலைமை வகித்தாா். நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் மதுராசெந்தில் முன்னிலை வகித்தாா். வனத்துறை அமைச்சா் மருத்துவா் ம.மதிவேந்தன் பூமிபூஜையைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினாா். மேலும், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியம், வடகையாத்தூா் ஊராட்சி, ஜேடா்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 49.99 லட்சத்தில் கட்டப்பட்ட சந்தையைத் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், வேலூா் பேரூராட்சித் தலைவா் லட்சுமி முரளி, செயல் அலுவலா் திருநாவுக்கரசு, வடகரையாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் மஞ்சுளா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com