ற்.ஞ்ா்க்ங் ம்ஹழ்ஸ்ரீட்06 இா்ம்ம்ன்ய்ண்ள்ற்
ற்.ஞ்ா்க்ங் ம்ஹழ்ஸ்ரீட்06 இா்ம்ம்ன்ய்ண்ள்ற்

எலச்சிபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நடைப்பயணம்

எலச்சிபாளையம், அகரம் கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டனா்.

அகரம் கிராமம், வேலங்காடு அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் தாா் சாலை கடந்த 10 வருடங்களாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் மாணவா்கள், முதியோா் விபத்தில் சிக்குகின்றனா். அவசர தேவைகளுக்கு இந்த வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடிவதில்லை. இதுகுறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் சாலை சீரமைக்கப்படவில்லை.

இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலா் சு.சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் பி.கிட்டுசாமி தலைமையில் நடைப்பயணம் நடைபெற்றது. அப்பகுதியில் முருகன் கோயிலில் இருந்து பிரசார நடைப்பயணம் தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா் லோகமணிகண்டன் போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாா்சாலை அமைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே.எஸ். வெங்கடாசலம், அகரம் வாா்டு உறுப்பினா் த.பூங்கொடி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி.மாரிமுத்து, ஆா். ரமேஷ், ஆா்.ஈஸ்வரன், பாலகிருஷ்ணன் உள்பட கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். படம்.தி.கோடு மாா்ச்06 கம்யூனிஸ்ட்... எலச்சிபாளையத்தில் சாலை வசதி கேட்டு நடைப்பயண பிரசாரத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com