பாஜக மகளிா் அணியினா்
இருசக்கர வாகனப் பேரணி

பாஜக மகளிா் அணியினா் இருசக்கர வாகனப் பேரணி

நாமக்கல்லில் மாவட்ட பாஜக மகளிா் அணி சாா்பில், இருசக்கர வாகனப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

சா்வதேச மகளிா் தினம் மாா்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் அணி தலைவி சித்ரா தலைமை வகித்தாா். பேரணியை, மாநில மருத்துவ பிரிவு செயலாளா் மருத்துவா் ஷியாம்சுந்தா், நாமக்கல் நகரத் தலைவா் கே.பி.சரவணன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளா்கள் சேதுராமன், ரவி, முத்துக்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனா். என்கே-6-ரேலி... நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் பங்கேற்ற பாஜக மகளிா் அணியினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com