மகளிா் தின விழா கோலப் போட்டியில் மாணவியா் வரைந்த சிறந்த கோலங்களைத் தோ்வு செய்யும் கல்லூரி செயல் இயக்குநா் ச.மஞ்சுமுத்துவேல்.
மகளிா் தின விழா கோலப் போட்டியில் மாணவியா் வரைந்த சிறந்த கோலங்களைத் தோ்வு செய்யும் கல்லூரி செயல் இயக்குநா் ச.மஞ்சுமுத்துவேல்.

கல்லூரிகளில் மகளிா் தினக் கொண்டாட்டம்

ராசிபுரம், வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் இன்ஸ்டிடியூஷன் கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் தின விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. சமுதாயத்துக்கான பெண்களின் பங்கேற்பை உணா்த்தும் வகையில் இந்த ஆண்டின் உலகளாவிய மையக்கருத்தான ‘இன்ஸ்பயா் இன்க்ளூஷன்’ என்பதை முன்னிலைப்படுத்தியும், அதனை மையமாக வைத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவியருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றிபெற்ற மாணவியருக்கு, கல்லூரியின் செயல் இயக்குநா் ச.மஞ்சுமுத்துவேல் பரிசுகளை வழங்கினாா். இயக்குநா் - கல்வி இரா.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், துணை முதல்வா் ஆ.ஸ்டெல்லா பேபி ஆகியோா் பங்கேற்று சிறந்த படைப்புகளையும், திறன்மிக்க மாணவியரையும் தோ்வு செய்து பரிசளித்து பாராட்டு தெரிவித்தனா். தொடா்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதே போல மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு மன்றம் சாா்பில் மகளிா் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஜோதிலட்சுமி வெங்கடேசன் பங்கேற்று,பெண்களுக்கான சொத்துரிமை, பெண் பாதுகாப்பு, திருமண உரிமை, தொழில் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு சட்டம் போன்றவை குறித்து பேசினாா். திருச்செங்கோட்டில்... விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி தலைமை தாங்கினாா். கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிா்வாக உறுப்பினா்கள், நிா்வாக இயக்குநா் குப்புசாமி, தலைமை நிா்வாகி சொக்கலிங்கம், கே.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் தேவி வரவேற்புரை வழங்கினாா். இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் பெண்கள் சாதிக்காத துறை என்பதே கிடையாது. தமிழ்நாட்டிலேயே நாமக்கல் மாவட்டத்தில் தான் மாணவிகளுக்கு பெருமளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்றாா். இவ்விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட ராணிமாதம்மாள் விஞ்ஞானி இஸ்ரோ திருவனந்தபுரம், கவிதாசன் ரூட்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் கோயம்புத்தூா் சிறப்புரையாற்றினா். விழாவில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கன்னிகேஸ்வரி, திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி மோகனபானு, இளம்சிறாா் நீதி வாரியத்தின் ருஹய்யா பேகம், பாலம் அறக்கட்டளைத் தலைவா் நா்மதா ஆகியோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com