விபத்தில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு கடிதம் வழங்கிய மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.முனுசாமி.
விபத்தில் உயிரிழந்த இளைஞா் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகைக்கான உத்தரவு கடிதம் வழங்கிய மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.முனுசாமி.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 19.52 கோடிக்கு தீா்வு

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 19.52 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான என்.குணசேகரன் அறிவுரையின்படி, மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி டி.முனுசாமி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி, சேந்தமங்கலம், குமாரபாளையம் நீதிமன்றங்களிலும் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில், விபத்து, காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அந்த வகையில், இந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,161 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அவற்றில் 1,629 வழக்குகளில் மொத்தமாக ரூ. 19 கோடியே 52 லட்சத்து 13 ஆயிரத்து 970-க்கு தீா்வு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com