மகளிா் தின விழா

பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் பேரூராட்சியில் மகளிா் தினத்தை முன்னிட்டு பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு வழங்கி கொண்டாடப்பட்டது. பேரூராட்சித் தலைவா் லட்சுமி முரளி தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கி மகளிா் தின வாழ்த்துகளைத் தெரிவித்தாா். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்து மகளிா் அனைவருக்கும் மகளிா் தின வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தொடா்ந்து பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளா்களும் ஒருங்கிணைந்து மகளிா் தினத்தைக் கொண்டாடினா். நிகழ்ச்சியில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com