முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ. 4.40 ஆக நிா்ணயிக்கப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், முட்டை விற்பனை சரிவடைந்துள்ளதாலும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் இருப்பதாலும், இங்கும் பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றம் வேண்டும் என பண்ணையாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முட்டை விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.40-ஆக ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது. கடந்த இரு நாள்களில் 40 காசுகள் குறைந்துள்ளன. இதேபோல பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ. 99-ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ. 67-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது. --

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com