கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில்
கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாமக்கல்: நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மோகனூா் சாலையில் உள்ள கொண்டிச்செட்டிபட்டி ஏரியில் சென்று கலக்கிறது. ஏற்கெனவே இந்த ஏரியில் அடிக்கடி மீன்கள் இறந்து தண்ணீரில் மிதக்கும் அவல நிலை உள்ளது. தற்போது, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் குடியிருப்பு மற்றும் வேளாண் நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளிக் கிணறுகளில் நீா் முற்றிலும் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்படுவதுடன் குடிநீா் ஆதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் ஏரிக்கு வரும் மழைநீா், கழிவுநீா் கலந்து ஏரி நிரம்பி குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிடும் நிலை உள்ளது. நகராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் தரப்பில் புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தமிழ்நாடு நீா்நிலைகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மீண்டும் நகராட்சி ஆணையாளரை சந்தித்து முறையிடுவது எனவும், ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி போராட்டங்களை மேற்கொள்வது எனவும் அக்குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. என்கே-11-லேக் நாமக்கல், கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியில் கலக்கும் கழிவுநீா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com