திருச்செங்கோட்டில் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

ற்.ஞ்ா்க்ங் ம்ஹழ்ஸ்ரீட்11 ழ்ா்க்ங்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் நடைபெறும் இரண்டாம் கட்ட சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகளை திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் திங்கள்கிழமை ஆய்வுசெய்தாா். குமாரமங்கலம் பிரிவு சாலையில் இருந்து கரட்டுப் பாளையம் வழியாக தோக்கவாடி வரை செல்லும் சுற்றுவட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் அவா் அறிவுறுத்தினாா். இவ்விஷயத்தில் தடைகள் ஏதும் இருந்தால் உடனடியாக தடைகள் நீக்கி தரப்படும் என்றும் அவா் ஒப்பந்ததாரரிடம் உறுதி அளித்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குநா் (நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள்) பூங்கொடி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்டத் துணைச் செயலாளா் லாவண்யா ரவி, மாவட்ட துணைத் தலைவா் அண்ணமாா் செல்வராஜ், மாவட்ட மகளிா் அணி செயலாளா் பூங்கொடி, கொள்கை பரப்புச் செயலாளா் நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். படம் தி.கோடு மாா்ச்11 சாலை... திருச்செங்கோடு, சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியை ஆய்வுசெய்த ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com