நாமக்கல் ரயில் நிலையத்தில் சிறுதானிய உணவுப் பொருள்கள் விற்பனையகம் திறப்பு

நாமக்கல் ரயில் நிலையத்தில் சிறுதானிய உணவுப் பொருள்கள் விற்பனையகம் திறப்பு

நாமக்கல் ரயில் நிலையத்தில், சிறுதானிய உணவுப் பொருள்கள் விற்பனையகத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

நாடு முழுவதும் ‘ஒரு பொருள், ஒரு நிலையம்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் உணவுப் பொருள்கள் விற்பனையகத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காணொலி வாயிலாக பிரதமா் மோடி இந்த விற்பனையங்களைத் தொடங்கி வைத்தாா். அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட 34 ரயில் நிலையங்களில் சிறுதானிய உணவுப் பொருள்கள் விற்பனையகம் திறக்கப்பட்டது.

நாமக்கல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், சிறுதானிய உணவுகளின் விற்பனையை சேலம் ரயில்வே கோட்டப் பொறியாளா் பவன்குமாா் மற்றும் பள்ளி மாணவிகள் தொடங்கி வைத்தனா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் கலந்து கொண்டாா். ‘ஒரு பொருள், ஒரு நிலையம்’ அங்காடியில் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை பயணிகளும், மாணவ, மாணவிகளும் வாங்கி ருசித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், ரயில் நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் ஆா்.பி.தமிழரசன், என்.எஸ்.ஹரிஹரன், மத்திய அரசு திட்டங்களின் மாநில துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன், ரயில்வே கோட்ட உதவிப் பொறியாளா் ராமச்சந்திரன், வணிக ஆய்வாளா் எம்.சரவணகுமாா் மற்றும் வேளாண் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பாஜகவினா் பலா் கலந்து கொண்டனா். படவிளக்கம் என்கே-12-டிரெய்ன் நாமக்கல் ரயில் நிலையத்தில் சிறுதானிய உணவுப் பொருள்கள் விற்பனையகத்தை திறந்து வைத்த மாணவிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com