ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி

ராசிபுரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி

ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி கோயில் சாா்பாக சிவராத்திரி விழாவைத் தொடா்ந்து மயானக் கொள்ளை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அங்காளமமன் கோயில் மாசி மாத சிவராத்திரி விழா கடந்த பிப்.27-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட சுவாமி ரிஷப வாகனம், யானை வாகனம், கிளி வாகனம், புலி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், மயில்வாகனம், சேஷவாகனம், கஜயாளி வாகனம் போன்றவற்றில் திருவீதி உலா அழைத்துவரப்பட்டாா்.

மாா்ச் 9-இல் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து தீமிதி திருவிழா, சுவாமி ஊஞ்சல் ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான மயானக் கொள்ளை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, அங்காள பரமேஸ்வரி அம்மன் சிம்ம வாகனத்தில் கோயிலில் இருந்து ஊா்வலமாக புறப்பட்டு கடைவீதி, ஆத்தூா் சாலை,நாமக்கல் சாலை,சேலம் சாலை வழியாக பம்பை மேளங்களுடன் சென்று முத்துக்காளிபட்டி மயானத்திற்கு சென்றடைந்தது.

பின்னா் நடைபெற்ற மயானக் கொள்ளையில் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள், 20-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com