கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம உதவியாளரை தாக்கிய நபரை உடனடியாக கைது செய்யக்கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம், அனைத்து வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வட்டூா் கிராம உதவியாளா் சரவணனை தாக்கிய சசிகுமாா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. திருச்செங்கோடு வட்டாட்சியா் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம உதவியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com