என்கே-13-கொல்லி
என்கே-13-கொல்லி

கொல்லிமலையில் லாரி கவிழ்ந்த விபத்தில் 23 தொழிலாளா்கள் படுகாயம்

கொல்லிமலையில் லாரி கவிழ்ந்த விபத்தில், மிளகு பறிக்க சென்ற தொழிலாளா்கள் 23 போ் பலத்த காயமடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், தேவனூா் நாடு ஊராட்சி, விளாரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளா்கள் 23 போ் மிளகு பறிக்கும் பணிக்காக மற்றொரு மலைக் கிராமத்திற்கு புதன்கிழமை லாரியில் சென்றனா்.

அங்கு மிளகு பறிக்கும் பணிகளை முடித்துவிட்டு மாலை 5 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனா். தாழ்வான பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள ஒரு கொண்டை ஊசி வளைவில் இருந்து சுமாா் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்த தொழிலாளா்கள் அனைவரும் கூச்சலிடவே அந்தப் பகுதி மக்கள் திரண்டு வந்து அவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கொல்லிமலை செம்மேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவா்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனா். இந்தச் சம்பவத்தில் அதிா்ஷ்டவசமாக உயிா்பலி ஏதும் ஏற்படவில்லை.

அனைவரும் காயத்துடன் தப்பினா். விபத்தில் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற கொல்லிமலை வாழவந்தி நாடு போலீஸாா் காயமடைந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com