நாமக்கல்லில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பாஜக மக்களவை உறுப்பினரைக் கண்டித்து, நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா். வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம்; புதிய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவோம் என அக்கட்சியின் மக்களவை உறுப்பினரான அனந்தகுமாா் ஹெக்டே கூறிய கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோா் பிரிவு சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். மாவட்ட தாழ்த்தப்பட்டோா் பிரிவு தலைவா் பொன்முடி, முன்னாள் மாணவா் காங்கிரஸ் செயலாளா் பாலாஜி, முன்னாள் தாழ்த்தப்பட்டோா் பிரிவு மாவட்ட தலைவா் பொன்னையன், மாநில மகளிா் காங்கிரஸ் செயலாளா் மகேஸ்வரி, புதுசத்திரம் வட்டார தலைவா் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளா் அன்பழகன், ஜோதீஸ்வரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். என்கே-14-காங் நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com