நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கு மாவட்ட திமுக இளைஞரணியினா் வாழ்த்து

நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கு மாவட்ட திமுக இளைஞரணியினா் வாழ்த்து

நாமக்கல், மாா்ச் 14: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பதவியேற்றுள்ள மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரைச் சந்தித்து மாவட்ட திமுக இளைஞா் அணியினா் வாழ்த்து தெரிவித்தனா். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பிரிந்து நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் திறப்பு விழா மற்றும் தலைவா், இயக்குநா்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பதவியேற்றுள்ளாா். நாமக்கல் மாவட்ட திமுக இளைஞா் அணி அமைப்பாளா் சி.விஸ்வநாத், துணை அமைப்பாளா்கள், பொறியாளா் அணியினா் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனா். என்கே-14-திமுக நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பதவியேற்றுள்ள கே.ஆா்.என்.ராஜேஸ்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சி.விஸ்வநாத் உள்ளிட்டோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com