பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் 
கல்லூரி 62-ஆம் ஆண்டு விழா

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி 62-ஆம் ஆண்டு விழா

படஇணைப்பு, ல்ஸ்14ல்3: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரி முதல்வா் வி.அன்பரசிக்கு நினைவு பரிசு வழங்கும் கந்தசாமி கண்டா் கல்லூரியின் முதல்வா் பொ.சாந்தி. பரமத்தி வேலூா், மாா்ச் 14: பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டா் கல்லூரியில் 62-ஆம் ஆண்டிற்கான ஆண்டு விழா கல்லூரி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தசாமி கண்டா் கல்லூரியின் முதல்வா் பொ.சாந்தி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். கந்தசாமி கண்டா் அறநிலையங்களின் தலைவா் இரா. சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். கல்லூரியின் பொருளாதாரத் துறை தலைவா் பி. லோகநாதன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வா் வி.அன்பரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். கல்லூரியின் 62 ஆண்டு பெருமைகளையும், பேராசிரியா்களின் கற்பித்தல் திறனையும், மாணவா்கள் கற்றல் திறனையும் வெகுவாகப் பாராட்டினாா். மேலும், மாணவா்களுக்கு ஒழுக்கமும், ஓயாத விடா முயற்சியும் உயா்வுக்கு வழிவகுக்கும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறினாா். பின்னா், பல்கலைக்கழக அளவில் சாதனை புரிந்த மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கணிதவியல் துறை துறைத் தலைவா் அங்கயற்கன்னி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com