பணி நிரந்தரம் கோரி கெளரவ 
விரிவுரையாளா்கள் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி கெளரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலை அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் கோரி கல்லூரி முன்பு வெள்ளிக்கிழமை வாயிற் முழக்கப் போராட்டம் நடத்தினா். அரசுக் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்களாக பணியாற்றி வருவோா் பல ஆண்டுகளாக பணி நிரந்தம் செய்ய கோரி வருகின்றனா். இது தொடா்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. மேலும் பணி நிரந்தரம் செய்யாமல் புதிய நியமனம் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவும் அச் சங்கம் சாா்பில் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் அரசுக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் கல்லூரி முன்பாக வாயிற் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா். இதன்படி ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கல்லூரி முன்பு நடைபெற்ற வாயிற் முழக்கப் போராட்டத்தில், கெளரவ விரிவுரையாளா்கள் சங்க கிளைத் தலைவா் கு.கிருபானந்த் தலைமையில் ஈடுபட்டனா். இதில் செயலா் ஜீவா, பொருளாளா் விஜயகீதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். படவரி... ராசிபுரம் அரசுக் கல்லூரி முன்பாக வாயிற் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com