வேலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
வேலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

பரமத்தி வேலூா் அருகே காலனி பகுதிக்கு மட்டும் சீரான குடிநீா் விநியோகம் செய்யாத ஊராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போாரட்டம் நடத்தினா். பரமத்தி வேலுாா் வட்டம், சேளூா், செல்லப்பம்பாளையம் காலனியில் உள்ள குடிநீா்த் தொட்டி மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக குடிநீா்த் தொட்டிக்கு சீராக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பலமுறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சேளூா், செல்லப்பம்பாளையம் ஊராட்சி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேலூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். பரமத்தி வேலுாா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா சமரசம் செய்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com