முத்தாயம்மாள் கலை கல்லூரியில் நுகா்வோா் உரிமை தின விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் மனித உரிமைகள் நுகா்வோா் பாதுகாப்பு மன்றம் சாா்பாக நுகா்வோா் உரிமைகள் தின விழா அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகா்வோா் கூட்டமைப்பின் தலைவா் கே.கே. சொக்கலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ‘நுகா்வோா் உரிமைகள் மற்றும் பொறுப்புகள்’ என்ற தலைப்பில் பேசினாா். கல்லூரியின் இயக்குநா் இரா.செல்வகுமரன், முதல்வா் எஸ்.பி.விஜயகுமாா், சமுதாய செயல்பாடுகளின் புல முதன்மையா் எம்.ராமமூா்த்தி, மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புமன்ற ஒருங்கிணைப்பாளா் இரா.மாலதி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com