பண்ணை உபகரணங்களின் தொகுப்பு பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை வேளாண்மை துறையினா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கபிலா்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு பண்ணை உபகரணங்களான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, காரைச்சட்டி, கருக்கு அரிவாள் அடங்கிய பண்ணை உபகரணங்களின் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது. சிறு, குறு விவசாயி சான்று அல்லது உழவா் பாதுகாப்பு அட்டை வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் கணினி சிட்டா நகல், ஆதாா் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை வேளாண்மை அலுவலகத்தில் அளித்து உபகரணங்களைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறித்தியுள்ளனா். இதில், பெருங்குறிச்சி, திடுமல், திடுமல் கவுண்டம்பாளையம், கோப்பணம்பாளையம் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, கபிலா்மலை வட்டார உதவி வேளாண்மை அலுவலா்கள் கோகுல், சந்திரசேகரன், ரமேஷ், ஸ்ரீதா், ராஜா ஆகியோரை விவசாயிகள் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என வேளாண்மை துறையினா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com