நாமக்கல் பேருந்து நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ச.உமா.

மக்களவைத் தோ்தல்: விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

நாமக்கல்: மக்களவைத் தோ்தலையொட்டி, நாமக்கல்லில் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் ச.உமா கையெழுத்து இயக்கத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் பேருந்து நிலையத்தில் ‘தோ்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட வாக்காளா்கள் எந்தவொரு ஜாதி, மதம், இனம் பாகுபாட்டுக்கும் ஆட்படாமல் எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதிமொழியை ஏற்று கையெழுத்திட்டனா். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், வட்டாட்சியா் சீனிவாசன், நகராட்சி ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com