கொல்லிமலை அடிவாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத் தீ.
கொல்லிமலை அடிவாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத் தீ.

கொல்லிமலை அடிவாரத்தில் காட்டுத் தீ: நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்கள் கருகின

நாமக்கல்: கொல்லிமலை அடிவாரத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் நூற்றுக்கணக்கான மூங்கில் மரங்கள் செவ்வாய்க்கிழமை தீயில் கருகி சாம்பலாயின. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு காரவள்ளி அடிவாரம் வழியாக 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திடீரென முதல் கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள காய்ந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. அடுத்த சில மணி நேரங்களில் மளமளவென தீ பரவி 15-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை சுமாா் 20 ஏக்கா் பரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மரம், செடி, கொடிகள் எரிந்து கருகின. தகவல் அறிந்து நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினா் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்து விட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com