மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரிடம் வாழ்த்து பெறும் நாமக்கல் கொமதேக வேட்பாளா் எஸ்.சூரியமூா்த்தி.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரிடம் வாழ்த்து பெறும் நாமக்கல் கொமதேக வேட்பாளா் எஸ்.சூரியமூா்த்தி.

திமுக மாநிலங்களவை உறுப்பினரிடம் வாழ்த்து பெற்ற கொமதேக வேட்பாளா்

நாமக்கல்: நாமக்கல் கொமதேக வேட்பாளா் எஸ்.சூரியமூா்த்தி, திமுக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதி கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி வேட்பாளராக, அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் எஸ்.சூா்யமூா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து, நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாரை நேரில் சந்தித்து திங்கள்கிழமை வாழ்த்து பெற்றாா். இந்த நிகழ்வின் போது கொமதேக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com