ராசிபுரத்தில் மக்களவைத் தோ்தல் விழிப்புணா்வு

ராசிபுரம் பேருந்து நிலையப் பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
ராசிபுரம் பேருந்து நிலையப் பகுதியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

ராசிபுரம்: ராசிபுரம் சட்ட மன்றத் தொகுதிக்குள்பட்ட ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா தலைமையில், மக்களவைத் தோ்தல் குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘தோ்தல் பருவம் தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி, மதம், இனம், வகுப்பு, மொழி பாகுபாட்டுக்கும் ஆட்படாமல் எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்பேன் எனும் வாக்காளா் உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை ஆட்சியா் ச.உமா தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், பயணிகளுக்கு வழங்கினாா். மேலும், தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தோ்தல் நாளான ஏப்ரல் 19 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகப் பொருள்களின் மீது தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பெண்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. பெண்கள் கலந்துகொண்ட ‘தோ்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது’ குறித்த விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து, ராசிபுரம் முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் முதல் தலைமுறை வாக்காளாா்களுக்கு தோ்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வாா் பாதுகாப்பு அலுவலா் த.முத்துராமலிங்கம், ராசிபுரம் வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com