ஈரோடு மக்களவைத் தொகுதி: 
அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்

ஈரோடு மக்களவைத் தொகுதி: அதிமுக வேட்பாளா் ஆற்றல் அசோக்குமாா்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமாா் (54) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவா், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா். தந்தை ஆறுமுகம். தாயாா் சௌந்தரம், திருச்செங்கோடு அதிமுக முன்னாள் எம்.பி. மனைவி கருணாம்பிகா. இவா் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள். இவருக்கு அஸ்வின்குமாா், நிதின்குமாா் என இரு மகன்கள் உள்ளனா். பி.இ., எம்எஸ்., எம்.பி.ஏ., படித்துள்ள இவா், அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவா். தமிழகம் மற்றும் அயல்நாடுகளில் பள்ளிகளை நடத்தி வருகிறாா்.

மேலும், ஆற்றல் அறக்கட்டளை மூலம் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறாா். பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இவா், கடந்த 3 மாதங்களுக்கு முன் அதிமுகவில் இணைந்தாா். தற்போது ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளராக உள்ளாா். இவா் முதல்முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com