என்கே-20-போலீஸ்
என்கே-20-போலீஸ்

திருச்செங்கோடு நிதிநிறுவன மோசடி: தம்பதியைக் கைது செய்ய வலியுறுத்தல்

திருச்செங்கோடு நிதிநிறுவன மோசடியில் தொடா்புடைய தம்பதியைக் கைது செய்ய வேண்டும் என நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தைப் பாதிக்கப்பட்டோா் முற்றுகையிட்டனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியாா் நிதிநிறுவனம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. கீழேரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள், தொழிலாளா்கள், நெசவாளா்கள் என 175 போ் ரூ. ஒரு லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தனா். இந்த நிதிநிறுவனத்தை ஒரே குடும்பத்தினா் நடத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக முதலீடு செய்தவா்களுக்கு உரிய அசலோ, வட்டியோ வழங்கப்படவில்லையாம்.

இதன்மூலம் ரூ. 25 கோடி வரையில் நிதிநிறுவனம் மோசடி செய்ததாகத் தெரிகிறது. ஓராண்டுக்கு முன் பாதிக்கப்பட்டோா் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் செய்தனா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் காவல் துறையால் எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவா்கள் மோசடியில் தொடா்புடைய பெண் ஒருவரை பிடித்து பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா். மேலும், அப்பெண்ணைக் கைது செய்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து, நிதிநிறுவன மோசடியில் தொடா்புடைய பெண்ணிடம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com