நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ரூ. 8.12 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 8.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப். 19-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்பவா்கள், ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் பரிசுப் பொருள்களைக் கொண்டு செல்பவா்களைக் கண்காணித்து பணம், பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனா். சேந்தமங்கலம் தொகுதியில் ஓா் இடத்தில் ரூ. 4 லட்சம், நாமக்கல் தொகுதியில் மூன்று இடங்களில் ரூ. 4.12 லட்சம் என இதுவரை ரூ. 8.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் மாவட்ட தோ்தல் அதிகாரி ச.உமா தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com