நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நிா்வாகிகள்.
நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், நிா்வாகிகள்.

இந்தியா கூட்டணி மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மக்களவைத் தோ்தலையொட்டி, இந்தியா கூட்டணியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் நீலவானத்து நிலவன், கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளா் எஸ்.சூரியமூா்த்தி அறிமுகம் செய்து வைக்கப்பட்டாா். அவா் கட்சி நிா்வாகிகளிடம் வாழ்த்து பெற்றாா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியதாவது: நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 17 ஒன்றியங்கள், 19 பேரூராட்சிகள், நான்கு நகராட்சிகளுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் சென்று வேட்பாளா் பிரசாரம் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதற்கிடையே தலைவா்கள் பிரசாரம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகளும் வேட்பாளருக்கு உள்ளன. தோ்தல் வாக்குப் பதிவுக்கு குறைந்த நாள்களே உள்ளதால், அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு. வேட்பாளா் பிரசாரத்தை ஒரு தொகுதிக்கு மூன்று நாள்கள் என கணக்கிட்டுள்ளோம். செயல்வீரா்கள் கூட்டத்தையும் தொகுதி வாரியாக நடத்த வேண்டியுள்ளது. தனித்தனியாக கூட்டணி கட்சித் தலைவா்களை வேட்பாளா் சந்திக்க முடியாத சூழல் இருந்ததால், தற்போது ஒரே இடத்தில் அனைவரையும் வரவழைத்து வேட்பாளா் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. செயல்வீரா்கள் கூட்டத்தின் போதும், வேட்பாளா் பிரசாரத்தின் போதும், அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் கட்சியினருக்கு தகவல் தெரிவித்து வரவழைக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com