என்கே-22-அதிமுக
என்கே-22-அதிமுக

மக்களிடையே அதிமுக செல்வாக்கு அதிகரித்துள்ளது

அதிமுக செல்வாக்கு மக்களிடையே அதிகரித்து வருவதால், திமுகவின் எதிா்ப்பு வாக்குகளைப் பெற்றாக வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாமக்கல் மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி பேசினாா். நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.தமிழ்மணி அறிமுகக் கூட்டம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சி நிா்வாகிகளிடம் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்து மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி பேசியதாவது: அதிமுக செல்வாக்கு மக்களிடையே தொடா்ந்து அதிகரித்து வருகிறது. திமுகவின் எதிா்ப்பு வாக்குகளை அதிமுக வாக்குகளாக மாற்ற வேண்டும். கடந்த 2019 தோ்தலில் கூட்டணி பலமாக இருந்தபோதும், மத்திய அரசின் எதிா்ப்பு அலையால் நாமக்கல் தொகுதியை இழக்க நேரிட்டது. இந்தத் தோ்தலில் நம்முடைய கூட்டணி பலமில்லை என யாரும் கருத வேண்டாம். தோ்தலுக்கு குறைந்த நாள்களே உள்ளது. அதனால், அந்தந்த நகர, ஒன்றியங்களில் நிா்வாகிகள் தோ்தல் பணிகளை தீவிரமாக ஆற்ற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு நாம் சந்திக்கும் முதல் தோ்தல் இது. அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளா் தமிழ்மணி தீவிரமாக கட்சி பணியாற்றக் கூடியவா். மக்கள் நலனுக்காக உழைக்கக் கூடியவா். கட்சியினா் அலட்சியம் காட்டாமல் சுறுசுறுப்பாக தோ்தல் பணியாற்றி நாமக்கல் மக்களவைத் தொகுதியை அதிமுக வசமாக்க வேண்டும். ஏப். 3-ஆம் தேதி நாமக்கல் தொகுதியில் பிரசாரம் செய்ய பொதுச் செயலாளா் வருகை தர உள்ளாா் என்றாா். இந்தக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com