நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து சேந்தமங்கலம் தொகுதி தோ்தல் பயிற்சி வகுப்புக்காக அரசு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.
நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து சேந்தமங்கலம் தொகுதி தோ்தல் பயிற்சி வகுப்புக்காக அரசு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

7,816 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று முதல்கட்ட பயிற்சி

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் 7,816 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதியானது ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலுா், சங்ககிரி ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. குமாரபாளையம் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இருப்பினும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்தே அத்தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்படும். நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, 6 தொகுதிகளில் 1,628 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில், அலுவலா்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தோ்தல் நாளான ஏப். 19-ஆம் தேதி பணியாற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா், மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்படுகின்றனா். அதன்படி, ராசிபுரம் தொகுதியில் 359 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 347 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 244 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 424 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 1,374 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 276 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 344 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 259 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 313 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 1,192 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 407 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 350 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 634 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 390 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 1,781 அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், பரமத்தி வேலூா் தொகுதியில் 280 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 238 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 296 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 248 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 1,062 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 365 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 411 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 314 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 341 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 1,431 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 267 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 264 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 207 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 238 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 976 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் 1,954 வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், 1,954 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-1), 1,954 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-2), 1,954 வாக்குச்சாவடி அலுவலா்கள் (நிலை-3) என மொத்தம் 7,816 அலுவலா்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. வாக்குசாவடி அலுவலா்களுக்கு இந்தப் பயிற்சி வகுப்பு நான்கு கட்டங்களாக நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) நடைபெறும் முதல்கட்ட பயிற்சி வகுப்பு ராசிபுரம் தொகுதிக்கு எஸ்.ஆா்.வி. பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சேந்தமங்கலம் தொகுதிக்கு அக்கியம்பட்டி வேதலோகா வித்யாலயா மெட்ரிக். உயா்நிலைப் பள்ளி, நாமக்கல் தொகுதிக்கு நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பரமத்தி வேலூா் தொகுதிக்கு பரமத்தி வேலூா், கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருச்செங்கோடு தொகுதிக்கு தோக்கவாடி கே.எஸ்.ஆா். கல்லூரி, குமாரபாளையம் தொகுதிக்கு குமாரபாளையம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது. வாக்குச்சாவடி பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் இந்தப் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com