தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை: 75 லிட்டா் பனைமர ‘கள்’ பறிமுதல்

திருச்செங்கோடு கோழிக்கால் நத்தம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் சரக்கு வாகனத்தில் கொண்டுவந்த 75 லிட்டா் பனைமர கள்ளை பறிமுதல் செய்தனா். திருச்செங்கோடு, கோழிக்கால் நத்தம் காந்தி சிலை அருகில் உதவி தோட்டக்கலை அலுவலா் சதீஷ்குமாா், தலைமைக் காவலா்கள் காா்த்திகேயன், ராதாகிருஷ்ணன் ஆகியோா் ஓ.ராஜாபாளையம் ஊராட்சி, கோழிக்கால் நத்தம் காந்திசிலை அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் 75 லிட்டா் பனைமரத்தின் கள் இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனா். கள்ளினை எடுத்த வந்த திருச்சி மாவட்டம், தொட்டியம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முருகேசன் (35) சக்திவேல் (34) ஆகியோரை ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com