பறக்கும் படை சோதனையில் ரூ. 60 ஆயிரம் பறிமுதல்

பரமத்தி வேலூா் காவிரி பாலம் காவல் சோதனை சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் முத்துக்குமாா் தலைமையில், சிறப்பு காவல் ஆய்வாளா் கண்ணதாசன், பறக்கும் படை குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கரூரிலிருந்து வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 60 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் அமித் சுனிலிடம் (24) நடத்திய விசாரணையில் கரூா் பகுதியில் திராட்சை இறக்கிவிட்டு அதற்கான பணத்தை வாங்கி வந்ததாகக் கூறியுள்ளாா். உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ. 60 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com