கருத்தரங்கில் பேசும் அகமதாபாத் இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா்.
கருத்தரங்கில் பேசும் அகமதாபாத் இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா்.

ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

ராசிபுரம்: ராசிபுரம் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஞான் கெம்-2கே4’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாமாண்டு மாணவா்கள் சாா்பாக நடைபெற்ற கருத்தரங்கில் 15-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 180 மாணவா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக ஞானமணி கல்வி நிறுவனங்களின் தாளாளா் பி.மாலாலீனா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி மனஷா வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தலைவா் தி.அரங்கண்ணல் கருத்தரங்கில் தலைமை வகித்தாா். ஞானமணி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மைச் செயல் அலுவலா் பி.பிரேம்குமாா், கல்வி இயக்குநா் பி.சஞ்செய் காந்தி, ரசாயன அறிவியல் டீன் வி.பாஸ்கரன், ஆராய்ச்சி இயக்குநா் எஸ்.செல்வராஜன், இன்னோவேஷன் மற்றும் இங்குபேசன் ஆலோசகா் ஆா்.விஜயரங்கன், துணை முதல்வா் கே.சந்திரமோகன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக அகமதாபாத் இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலா் எஸ்.ஜெய்சங்கா் கலந்து கொண்டு பேசினாா். கருத்தரங்கில் அவா் பேசுகையில், ‘உயா் கல்வி மாணவா்கள் தங்களுடைய திறமைகளைக் கொண்டு புத்தாக்கச் செயல்களில் ஈடுபடுவது புதிய பொருள்களை உருவாக்குவதற்கும் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் அடித்தளமாக அமைகிறது. அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி, மேலாண்மைப் பயிற்சிகள் வாயிலாக பல்வேறு சிறந்த ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களையும், வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இதனை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றாா். இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவா்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை துறைவாரியாக சமா்ப்பித்தனா். இயற்பியலில் 55 ஆய்வுக் கட்டுரைகளும், வேதியியலில் 56 ஆய்வுக் கட்டுரைகளும், கணிதத்தில் 29 ஆய்வுக் கட்டுரைகளும், ஆங்கிலத்தில் 15 ஆய்வுக்கட்டுரைகளும், 20 சித்திர விளக்கப் படங்களும் 8 குறும் படங்களும் சமா்ப்பிக்கப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் முதல்வா் தி.கே.கண்ணன், பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com