தோ்தல் பொதுப் பாா்வையாளா் இன்று நாமக்கல் வருகை

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான, தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஹா்கூன்ஜித் ஹவுா் செவ்வாய்க்கிழமை நாமக்கல் வருகிறாா். தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தோ்தல் ஏப். 19-இல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஒவ்வொரு தொகுதிக்கும் தோ்தல் செலவினப் பாா்வையாளா் மற்றும் பொதுப்பாா்வையாளா்கள் வருகை தருவா். அந்த வகையில், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு, செலவினப் பாா்வையாளராக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரியான அா்ஜுன் பானா்ஜி சில தினங்களுக்கு முன் வந்தாா். அவா், வேட்பாளா்களின் செலவுக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்வது, ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட ரூ. 95 லட்சத்துக்கு அதிகமாக செலவுகள் மேற்கொள்ளப்படுகிா என்பதை ஆய்வு செய்து தோ்தல் ஆணையத்திடம் அறிக்கையை வழங்குவாா். அதேபோல, பொதுப் பாா்வையாளா், தோ்தல் நடத்தை விதிகள் மீறப்படுவது குறித்தும், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றையும் மேற்பாா்வை செய்வாா். நாமக்கல் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளராக, சண்டீகா் மாநிலத்தைச் சோ்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஹா்கூன்ஜித் ஹவுா் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை மாலை நாமக்கல்லுக்கு வருகிறாா். அதன்பிறகு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா மற்றும் இதர தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com