விழாவில் மழலையா்களுக்கு பட்டம் வழங்கும் சிறப்பு விருந்தினா்.
விழாவில் மழலையா்களுக்கு பட்டம் வழங்கும் சிறப்பு விருந்தினா்.

வித்யாநிகேதன் இண்டெல் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் வித்யா நிகேதன் இண்டெல் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்பள்ளியின் மழலையா்கள் பட்டமளிப்பு விழா, விருதுகள் வழங்கும் விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் பள்ளியின் தலைவா் பி.நடராஜன் தலைமை வகித்தாா். ஆசிரியை பு.பவித்ரா வரவேற்றுப் பேசினாா். பள்ளியின் முதல்வா் எம்.உமா ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக ஆத்தூா் அருண் மழலையா் மற்றும் ஆரம்பப் பள்ளியின் தலைவா் டி.நாராயணி நாசா் பங்கேற்று மழலையா்களுக்கு பட்டங்கள் வழங்கினாா். மேலும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, கையெழுத்து போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டி, வெளிப்புற போட்டிகள் ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக சிறப்பு விருந்தினரை பள்ளித் தாளாளா் எஸ்.பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். நிா்வாகக்குழு உறுப்பினா் ஆா்.கணேசன், ஆா்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் கெளரவித்து நினைவுப் பரிசளித்தனா். மழலையா் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா் டி.நாராயணி நாசா், பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா்கள் எம்.செல்வராஜு, எஸ்.அப்துல் கரீம், சி.ஈஸ்வரமூா்த்தி, சு.இளையப்பன், என்.ஹேமலதா, பள்ளி முதல்வா் எம்.உமா ஆகியோா் பட்டங்களை வழங்கிப் பேசினா். விழாவில் சிறந்த ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com