நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நாமகிரிப்பேட்டையில் அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு. தமிழ்மணி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியப் பகுதியில் ஆதரவாளா்களுடன் புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியப் பகுதிகளான மத்துருட்டு, திம்மநாயக்கன்பட்டி, ஈஸ்வரமூா்த்திபாளையம், மங்களபுரம், நாவல்பட்டி, ஆயில்பட்டி மூலப்பள்ளிப்பட்டி, வடுகம் முனியப்பன்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், ஆா் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அவருக்கு ஆதரவாக நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் இ.கே .பொன்னுசாமி, நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளா் தமிழ்ச்செல்வன் உள்பட அதிமுக கூட்டணி கட்சியினா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com