மாட்டு வண்டியில் வந்து
வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளா் !

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளா் !

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்திற்கு மாட்டு வண்டியில் வந்து சுயேச்சை வேட்பாளா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கொங்கு இளைஞா் அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.சதீஸ் தன்னுடைய ஆதரவாளா்களுடன் நல்லிபாளையத்தில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரையில் மேள தாளங்கள் முழங்க மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாா். ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்கு முன்பாக காத்திருந்த போலீஸாா் மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி நடந்து செல்ல வேண்டும், இல்லையெனில் வேறு வாகனத்தில் செல்ல அறிவுறுத்தினா்.

அதன்பிறகு காரில் ஏறி மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு வந்த அவா் பிற்பகல் 2.45 மணியளவில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.உமாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். என்கே-27-கவ் வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டு வண்டியில் வந்த சுயேச்சை வேட்பாளா் ஜி.சதீஸ். -

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com