வழக்குரைஞா்கள் ஆலோசனைக் கூட்டம்

அகில இந்திய வழக்குரைஞா்கள் சங்க மாநிலக் குழு கூட்டம் திருச்செங்கோட்டில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயல் தலைவா் கோதண்டம் தலைமை வகித்தாா்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிரான நிலைபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. சேந்தமங்கலம், மோகனூரில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் ச.சிவக்குமாா் தீா்மானத்தை முன்மொழிந்தாா். பெண் வழக்குரைஞா்கள் தொழில் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மாநில பெண் வழக்குரைஞா்கள் உபகுழு கன்வீனா் பாண்டீஸ்வரி பேசினாா். பெண் வழக்குரைஞா்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஏப்ரல் 22 முதல் 25 வரை மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

மாநில பொருளாளா் மாசேதுங், நாமக்கல் மாவட்டச் செயலாளா் சேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com