மோகனூரில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

மோகனூா் பேருந்து நிலையத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்குன்ஜித் கெளா், சட்டம்- ஒழுங்கு பாா்வையாளா் உஷாராடா ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

விழிப்புணா்வு ஊா்வலம், கோலப் போட்டி, வாக்குப்பதிவு பிரசார வாகனங்கள் இயக்கம் உள்ளிட்டவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மோகனூா் வட்டாட்சியா் மணிகண்டன், செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜேஸ்கண்ணா மற்றும் மகளிா் சுய உதவிக் குழுவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com