ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இதுவரை ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா், விடியோ கண்காணிப்புக் குழுவினா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூா், குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் பறக்கும் படையினா் ரூ. 21,54, 60, 326 மதிப்பிலானவற்றை பறிமுதல் செய்துள்ளனா். மதுபானங்கள் ரூ.11,980 மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com