நாமக்கல் மாவட்டத்தில் புதிய காங்கிரஸ் நிா்வாகிகள் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில், கட்சிப் பணிகளை துரிதப்படுத்த புதிய நிா்வாகிகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை நியமித்துள்ளாா்.

அதன்படி, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் மற்றும் குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கிய நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளா் டி.டி.கே.சித்திக் மற்றும் தமிழ்நாடு முன்னாள் மாணவா் காங்கிரஸ் செயலாளா் எம். பாலாஜி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளா்களாக ஆறுமுகம், ஜெயபால் மற்றும் மாவட்ட எஸ்.சி. பிரிவு முன்னாள் தலைவா் எம்.பொன்னையன் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com