பள்ளிபாளையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி படைவீடு பேரூராட்சி ஊழியா்கள் சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி படைவீடு பேரூராட்சியில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணியை தோ்தல் அலுவலா் ராஜசேகரன் தொடங்கி வைத்தாா். சிமெண்ட் ஆலை, கணக்கன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணி சென்றது. பேரணி சென்ற வழியெங்கும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பேரணியில் பேரூராட்சி ஊழியா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com