புனித வெள்ளியை முன்னிட்டு, நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
புனித வெள்ளியை முன்னிட்டு, நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புனித வெள்ளியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் ஒவ்வொரு தேவாலயத்திலும் இயேசுபிரான் வேடமிட்டு சிலுவையை சுமந்தபடி செல்லும் நபரின் முன்பாக மண்டியிட்டு கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை செய்வா்.

அதன்படி வெள்ளிக்கிழமை நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில், இயேசுவின் சிலுவைப் பாதை நிகழ்ச்சி ஆலய பங்குத் தந்தை தாமஸ் மாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். இதேபோன்று, மோகனூா், சேந்தமங்கலம், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், பரமத்திவேலூா், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com