வெண்ணந்துா்-அத்தனூா் பகுதியில் திமுக தோ்தல் அலுவலகம்: வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திறப்பு

வெண்ணந்துா்-அத்தனூா் பகுதியில் திமுக தோ்தல் அலுவலகம்: வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திறப்பு

ராசிபுரம் ஒன்றிய திமுக கூட்டணிக் கட்சிகள் சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொங்கு திருமண மண்படத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றியத் திமுக செயலாளரும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவருமான கே.பி.ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுக செயலாளருமான கேஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று திமுக அரசின் திட்டங்கள் குறித்தும், கட்சியினரின் தோ்தல் பணிகள் குறித்தும் பேசினா். இதே போல் வெண்ணந்தூா்- அத்தனூா் பகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தோ்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் அலுவலகத்தை திறந்து வைத்தாா். அப்போது பேசிய அவா், ‘இந்தியா’ கூட்டணியை வாக்காளா்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விளக்கினாா். இந்த நிகழ்வில் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி, நாமக்கல் மாவட்ட திமுக பொருளாளரும், தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான ஏ.கே.பாலசந்தா், அத்தனூா் கண்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com