அதிமுக அதிமுகவில் இணைந்த முதல் வாக்காளா்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.
அதிமுக அதிமுகவில் இணைந்த முதல் வாக்காளா்களை வாழ்த்திய முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி.

அதிமுகவில் இணைந்த முதல் வாக்காளா்கள்!

சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியங்களைச் சோ்ந்த முதல் வாக்காளா்கள் அதிமுகவில் இணைந்தனா். சேந்தமங்கலம், காந்திரபுரத்தில் அதிமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பி.தங்கமணி தோ்தல் பணிமனையை திறந்து வைத்து நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அதன்பிறகு, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியத்தில் 18 வயது நிரம்பி முதல்முறையாக தோ்தலில் வாக்களிக்கும் இளைஞா்கள் மாவட்டச் செயலாளா் பி.தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களுக்கு கட்சித் துண்டு அணிவிக்கப்பட்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com